This page contains 'Unicode' Tamil contents. Make sure to set your browser encoding to 'Unicode'. Click here to know how to enable Unicode in your browser.

கனிகாஸ் - நிஜமல்ல கதை


இனிவரும் நாட்களில் என் எண்ணத்தில் வரும் கற்பனை சம்பவங்களை அவ்வப்போது இந்த வலைப்பக்கங்களில் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்

தமிழில் நான் சராசரிக்கும் மிக மிகக் கீழ். எனவே எழுத்துப் பிழை/பொருட்பிழை இருப்பின் மன்னிக்க (சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்கிறேன்)

இதுவரை...


கதைச்சுருக்கத்திற்கு, மேலே சொடுக்கவும் (முந்தைய பகுதிகளை விரிவாக படிக்க விரும்புபவர்கள் தேதி வாரியாக கீழிருந்து மேலாகப் படிக்கவும்.)

உலகே மாயம் வாழ்வே மாயம்

மறுநாள்

"என்னடா கதிர் இன்னிக்கு சொல்லப்போறியா?" - ரத்னகுமார்

"இல்லடா, இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணி சொல்லலாம்னு இருக்கேன். நீ வேற ஏன்டா நடுவுல பூந்து கொழப்பறே" - கதிர்

"நேத்து சும்மா வெளையாட்டுக்கு சொன்னேன்டா. ரெண்டுல ஒன்னு தெரிஞ்சிக்கலாம்னுதான்" - ரத்னகுமார்

"இன்னிக்கு நான் சொல்லலைன்னா நீ சொல்ல போறியாடா" - கதிர்

"நான் சொல்லலைடா, ஆனா கானா நேத்து போன வேகத்தப்பாத்தா இன்னிக்கு சொல்லிடுவான் போல இருக்குது. அவன் சொல்லி அத அவ சரின்னு ஒத்துக்கிட்டா அப்புறம் நீ தேவதாஸ் தான்" - ரத்னகுமார்

"நீ வேற ஏன்டா அவன பயமுறுத்தற, கதிர் நீ அவளை நிஜம்மாவே காதலிச்சா சொல்லிட வேண்டியதுதானடா" - விஸ்வா

"சொல்லத்தான்டா போறேன், ஆனா இன்னிக்கு இல்ல" - கதிர்

"சரி இன்னிக்கு வேணா. அப்ப எப்பத்தான் சொல்லப்போற" - விஸ்வா

"இன்னும் பத்து நாள்ல அவ பொறந்தநாள் வருது வர்ற அக்டோபர் பதினாறு அன்னிக்கு அவகிட்ட சொல்லிடலான்னு இருக்கேன்" - கதிர்

"சரி ஏதவது ஒரு நல்ல கிப்ட் கோல்ட் ரிங் மாத்ரி வாங்கி ப்ரசன்ட் பண்ணு" - விஸ்வா

"நல்ல ஐடியா. ரிங்கே ப்ரசன்ட் பண்ணலாம் அடுத்த வாரம் செலெக்ட் பண்ணும்போது என் கூட வா" - கதிர்

அப்போது முகத்தில் கலவரத்துடன் வாசு வந்தான்

"மச்சி! கானா வெசம் குடிச்சிட்டான்டா! அவன ராஜேந்தர் ஆட்டோல ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போயிட்டான். நான் உங்களுக்கு சோல்லிட்டு கூட்டிட்டு போலாம்னு ஓடி வந்தேன்" - வாசு

அனைவரும் கானாவைப் பார்க்க விரைந்தார்கள்.

ஆஸ்பத்திரியில்..

அனைவரும் கானாவைப் பார்க்கச் செல்ல, கதிர் மட்டும் சீஃப் டாக்டரைப் பார்க்கப் போனான்.

"பொழச்சிக்குவானா டாக்டர்?" - கதிர்

"சரியான சமயத்துல கொண்டாந்து சேர்த்திருக்கீங்க. க்ரிடிக்கல் ஸ்டேஜைத் தாண்டிட்டான். கவலைப்படாதிங்க பொழைக்க வச்சிடலாம்" - டாக்டர்

சற்றே நிம்மதியானான் கதிர்

"என்னைய்யா ப்ரச்சனை அவனுக்கு? லவ்வா? இல்ல பரிட்சைல மார்க் வரலயா? இதெல்லாம் ஒரு ப்ரச்சனையா? இன்னும் வாழ்கைல எவ்வளவு ப்ரச்சனைய பாக்கவேண்டியிருக்கு, படிக்கும்போதே இப்படி பண்ணாக்க இவன்லாம் எப்படிய்யா வருங்காலத்துல வாழ்க்கைய ஓட்டப் போறான்?" - டாக்டர்

இதற்குள் ராஜேந்தரும் வாசுவும் அங்கே வந்தார்கள்.

எல்லாரும் சேர்ந்து டாக்டரின் அறையை விட்டு கானா படுத்திருந்த அறைக்கு வந்தார்கள். கானா மயக்கத்திலிருந்தான். அருகில் அவனையே பார்த்தபடி விஸ்வாவும் ரத்னகுமாரும் அமர்ந்திருந்தனர்

"என்னடா ராஜேந்தர் நடந்துச்சி ?" - விஸ்வா

"எனக்குத் தெரியலைடா, சாயந்தரம் காலேஜ்ல இருந்து வந்து பாத்தா ரூம்ல கானா வாய்ல நொரை தள்ளிப்போய் கீழ விழுந்து கெடந்தான், எனக்கு கை காலெல்லாம் வெடவெடன்னு ஆயிடுச்சி, ஒடனே ஆட்டோல தூக்கிபோட்டு இங்க கொண்டாந்து போட்டுட்டு வாசுக்கு போன் பண்ணி உங்கள கூட்டினு வரச்சொன்னேன்" - ராஜேந்தர்

இதற்குள் கானா கண்களை மெல்லத் திறந்தான். மெதுவாக சுற்றுப்புறத்தை உணர்ந்தவன் "என்னய ஏன்டா காப்பாத்துனீங்க" என்று சொல்ல நினைத்து முடியாமல் போனதால் பலமிழந்து அழ ஆரம்பித்தான். அவனைத் தேற்றிவிட்டு விஸ்வா, கதிர், ரத்னகுமார் மூவரும் ஆஸ்பத்திரியை விட்டு வீடு திரும்பினார்கள்.

மறுநாள் ஆஸ்பத்திரியில் கானா சற்று தெம்பாக இருந்தான். மாலை வீடு திரும்பலாம் என்று டாக்டர் கூறியிருந்தார். அன்று கதிர்,விஸ்வாவுடன் இன்னும் சில கல்லூரி நண்பர்களும் கானாவை வந்து பார்த்துப் பேசிவிட்டு சென்றனர். அனைவரும் சென்ற பிறகு விஸ்வாவும் கதிரும் கானாவிடம் என்ன நடந்தது என்று கேட்டான். சற்று நேரம் உடைந்து அழுத கானா மெதுவாக பேச ஆரம்பித்தான்.

"அன்னிக்கு ரத்னகுமார் சொன்னவுடனே ஒரு வெறியில் நேரா ஹொப் காலேஜான்ட இருக்குற கிஃப்ட் ஷாப்ல ஒரு கார்டு வாங்கி அதுல 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்'னு எழுதி ஒரு ரோஸ் வச்சி அவகிட்ட நேராப்போய் ஐ லவ் யூ சொன்னன்டா" - கானா

"அவ முடியாதுன்னு சொன்னாளா? அப்பிடி சொன்னா நீ உடனே இப்படி முட்டாள்த்தனமா பண்ணுவியா? போடங்கு!" - விஸ்வா

"அவ என்னை லவ் பண்லேன்னு சொல்லுவான்னு நான் எதிர் பாக்கலைடா. அது கூட பரவால்ல, எல்லார் முன்னாலையும் கூட்டி வச்சி என்னய பட்டிக்காட்டான், லூசு அது இதுன்னு அவமானப்படுத்திட்டா. அதுக்கப்றமும் உயிர் வாழனுமான்னுதான் அப்டி பண்ணிட்டேன்" - கானா

"சரி நடந்தது நடந்துபோச்சி, இனிமேயாவது இப்படியெல்லாம் பண்ணாம ஏதாவது வாழ்க்கையில பெரிசா சாதிக்கப் பாரு" - விஸ்வா

"என்னிய அவமானப்படுத்தினா இல்ல, இந்தப் குப்பத்து கானா எவ்வளவு பெரிய ஆளா வரமுடியும்னு அவளுக்கு செஞ்சி காட்ற வரை நான் ஓயமாட்டன்டா" - கானா

"தட்ஸ் குட்" - விஸ்வா

இந்த களெபரத்தில் சங்கீதாவின் பிறந்தநாளுக்கு கதிர் அவன் காதலைச் சொல்லலாம் என எடுத்திருந்த முடிவை விஸ்வாவும் ரத்னகுமாரும் மறந்தே விட்டார்கள்.

என்ன நடந்தாலும் தன் காதலை அவள் பிறந்தநாளன்று சொல்லிவிடுவதென்று தீர்மாணித்திருந்தான் கதிர், அவளுக்கு பரிசளிக்க ஒப்பனக்காரத் தெருவிலிருக்கும் நகைக்கடை ஒன்றில் ஏழு சிறு வைரக்கற்கள் பதித்த V வடிவிலான தங்க மோதிரமொன்றை வாங்கி வைத்தான்.

மறுநாள் சங்கீதாவிற்கு பிறந்தநாள். இரவு முழுதும் கதிருக்கு தூக்கம் வரவில்லை. நொடிக்கொருதரம் சாட்டின் ரிப்பனால் சுற்றி அழகாகன சிறு பெட்டியில் வைத்திருந்த மோதிரத்தை பார்த்துக்கொண்டிருந்தான்.


நீங்க சொல்லுங்க