This page contains 'Unicode' Tamil contents. Make sure to set your browser encoding to 'Unicode'. Click here to know how to enable Unicode in your browser.

கனிகாஸ் - நிஜமல்ல கதை


இனிவரும் நாட்களில் என் எண்ணத்தில் வரும் கற்பனை சம்பவங்களை அவ்வப்போது இந்த வலைப்பக்கங்களில் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்

தமிழில் நான் சராசரிக்கும் மிக மிகக் கீழ். எனவே எழுத்துப் பிழை/பொருட்பிழை இருப்பின் மன்னிக்க (சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்கிறேன்)

இதுவரை...


கதைச்சுருக்கத்திற்கு, மேலே சொடுக்கவும் (முந்தைய பகுதிகளை விரிவாக படிக்க விரும்புபவர்கள் தேதி வாரியாக கீழிருந்து மேலாகப் படிக்கவும்.)

ஒய்யாரக் கொண்டையாம் உச்சியிலே தாழம்பூவாம் ...

யோசித்துப் பார்த்தபோது சங்கீதா கதிரை விரும்பவில்லை என்றுதான் தோன்றியது ரத்னகுமாருக்கு.

மறுநாளே சோதித்துப் பார்க்க முடிவுக்கு வந்தவனாக அதற்கான திட்டங்களைத் தீட்டினான்.

மறுநாள் கல்லூரியில் கதிரைப் பார்த்த சங்கீதா, புன்னகைத்து "எப்டி. இருக்க கதிர்" என்றாள்.

"நான் நல்லாயிருக்கேன். நீ எப்டி இருக்க சங்கீ? பாத்து ரொம்ப நாளாச்சி" - கதிர்

"ரெண்டு வாரமா காலேஜுக்கு நான் லீவு. ஊருக்கு போயிருந்தேன். நேத்து தான் வந்தேன். வந்தப்றம்தான் எல்லா விஷயமும் தெரிஞ்சது. சரி காலேஜ்ல உன்ன பாத்துக்கலாம்னுதான் ஆஸ்பத்திரிக்கு வரல" - சங்கீதா

"பரவாயில்லை. எல்லாந்தான் நல்லபடியா முடிஞ்சதே. செமஸ்டர் வருது, இனிமேதான் படிக்க ஆரம்பிக்கனும்" - கதிர்

சிறிது மௌனத்துக்குப் பின் இருவரும் வகுப்புக்கு செல்ல கலைந்தார்கள்.

மறுநாள் கதிர் சங்கீதாவைப் பார்த்தபோது வழக்கமான புன்னகை இல்லை.

"என்னாச்சி சங்கீ" - கதிர்

"ஒன்னுமில்லை. உன்கிட்ட கொஞ்சம் சீரியஸா பேசனும்." - சங்கீதா

"சொல்லு. என்ன விஷயம்"- கதிர்

"நாம பேசாம நண்பர்களா மட்டும் இருந்துடலாம் கதிர்" - சங்கீதா

"என்ன சொல்ற!" அதிர்ந்தான் கதிர்

"ஆமா. வாசு விஷயத்துல காதல்னால பட்ட கஷ்டத்தைப் பார்த்தா நம்ம வீட்ல அந்த மாதிரியெல்லாம் எதுக்கு பெத்தவங்களை வருத்தப்பட வைக்கனும்னு தோனுது." - சங்கீதா

"அதெல்லாம் எதிர்பார்த்தது தானே. இப்ப ரெண்டு பேர் வீட்லயும் சமாதானமா போய் வாசு சந்தோசமா இல்லையா" - கதிர்

"இல்ல... எனக்கு இது சரிபட்டு வரும்னு தோனலை நாம நண்பர்களாவே இருப்பம்" - சங்கீதா

நடப்பதை மெதுவாக உணர்ந்த கதிர் தீர்மானமாய் சொன்னான் "உன்னை மாதிரி நட்பை காதலாவும் காதலை நட்பாவும் மாத்தி கொச்சைப்படுத்திக்க எனக்கு தெரியாது. கடைசிவரை நட்பு நட்புதான், காதல் காதல்தான். அப்டித்தான் நான் வளர்ந்தேன். அப்டித்தான் இருப்பேன். உனக்கு பிடிக்கலைன்னா நீயும் நானும் ஒரு கல்லூரியில படிச்சவங்க அப்டின்ற உறவோட நிறுத்திக்கலாம்." - கதிர்

பதிலேதும் சொல்லாமல் கிளம்பினாள் சங்கீதா

அதன் பின் எங்கு பார்க்க நேர்ந்தாலும் அறிமுகமில்லாத நபர்களைப் பார்ப்பதைப் போலவே கதிரைப் பார்த்தாள் சங்கீதா.

கதிருக்கு மனவருத்தமிருந்தாலும் படிப்பிலே கவனம் செலுத்த ஆரம்பித்ததால் காதல் தோல்வி அவ்வளவாக பாதிக்கவில்லை. சங்கீதா ஏன் திடீரென காதலை முறித்தாள் என்பது மட்டும் விளங்கவே இல்லை.

சிலநாட்களுக்கு பின் மருதமலையில் தமிழ்க் கடவுளை வணங்கி வரச் சென்ற கதிர். மலை இறங்கும் போது பாதைக்கு தள்ளி இருந்த இளைப்பாறும் இடங்களில் ஒன்றில் பழகிய முகமொன்று தெரிய, உற்று நோக்கினான்.

அங்கே அவன் கண்ட காட்சி...

ரத்னகுமாரோடு சங்கீதா!

இருவரும் நெருக்கமாக அமர்ந்து காதலர்கள் போல பேசிக்கொண்டிருந்தார்கள்.

பார்க்காதது போல முகம் திருப்பிக் கொண்டு கீழிறங்கிய கதிரை ரத்னகுமார் மட்டும் கவனித்துவிட்டான்.

மறுநாள், ஏதும் பேசாமல் வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்தான் கதிர். மௌனத்தை உடைத்த ரத்னகுமார் "உன்கிட்ட சொல்லாம செஞ்சாத்தான் உண்மையான விளைவு தெரியும்னு அப்ப சொல்லலை. நடந்ததை இப்ப சொல்றேன் கேளு."

வெறுப்பாய் அவனைப் பார்த்தான் கதிர்

"நீ கத்திக் குத்து பட்டப்பவும் அதை சமாளிக்க கட்டப்பஞ்சாயத்துக்கு நாங்க போனப்பவும் ஒரு முறையாவது உன்னை பார்க்க அவ வருவா அப்டின்னு நெனச்சேன். வராதப்பவே எங்கயோ தப்புன்னு தோனுச்சி" - ரத்னகுமார்

மௌனமாய் கதிர்.

"நீ நெனைக்கற அளவுக்கு தூய காதலெல்லாம் அவ கிட்ட இல்லை. உங்க காதலை உடைக்க ஒரு உன்னப்பத்தி பொய்யும் என்னப்பத்தி ஒரு பொய்யும் ஒரு உண்மையும் சொன்னேன். அவ்ளவுதான்" - ரத்னகுமார்

என்ன என்பது போல தலையசைத்தான் கதிர்

"கத்தி ஏடாகூடமா குத்திட்டதால இனிமே உனக்கு குழந்தை பெற தகுதியில்லைன்னு ஒரு பொய். அப்றம் அவளை நான் காதலிக்கிறதா ஒரு பொய். அப்றம் எனக்கு இருக்குற சொத்து பத்தி ஒரு உண்மை. அதோட முடிவு தான் நேத்து நீ மருதமலையில பார்த்தது."

ச்சீ என்றானது கதிருக்கு. சங்கீதாவினை நினைத்தால் குமட்டிக் கொண்டு வந்தது

"உனக்காக என் வாழ்க்கையை அழிச்சிகிட்டேனோன்னு நெனைக்காத, இவளை எப்படி கழட்டி விடனும்னு எனக்கு தெரியும். அப்ப கூட எனக்கப்றம் யாரு கூட சுத்தறதுன்னு அவ நெனைப்பாளேயொழிய வேற எந்த துக்கமும் அவளுக்கு கெடையாது" - ரத்னகுமார்

(ப்ளாஷ்பேக் முடிஞ்சி போச்சி! எங்க இருக்குறோம்னு குழப்பமா இருக்குதா? கதிர், விஸ்வா, நித்யா எல்லாரும் சென்னை அடையாறில் ஒரு ஓட்டலில் உக்காந்து பேசிக்கிட்டு இருக்காங்க)

"அப்றம் கொஞ்ச நாள் எல்லா பொண்ணுங்க மேலயும் வெறுப்பா திரிஞ்சிகிட்டு இருந்தேன். விஸ்வாதான் பேசிப் பேசி சகஜ நேலமைக்கு கொண்டு வந்தான். இன்னிக்கு நான் நல்லா இருக்குறேன்னா அதுக்கு இவனும் ஒரு காரணம்" - கதிர்

"பழைய கதையெல்லாம் போதும். இப்ப என்ன பன்றீங்க மிஸ்டர் விஸ்வா?" - நித்யா

"மிஸ்டர் எல்லாம் வேணாம். என்னை விஸ்வான்னே கூப்பிடுங்க நித்யா . இப்ப ஐ.ஏ.எஸ்க்காக படிக்க ஆரம்பிச்சிருக்கேன். சரி நேரமாயிடுச்சி இன்னோரு நாள் பாக்கலாம்" தொடர்பு விவரங்களை அறிந்து கொண்டு பிரிந்தான் விஸ்வா

"சரி கதிர். அடுத்த வாரம் பார்க்கலாம்" நித்யாவும் கதிரும் சாப்பிட்டதற்கு பணம் கொடுத்துவிட்டு கிளம்பினர்


நீங்க சொல்லுங்க