This page contains 'Unicode' Tamil contents. Make sure to set your browser encoding to 'Unicode'. Click here to know how to enable Unicode in your browser.

கனிகாஸ் - நிஜமல்ல கதை


இனிவரும் நாட்களில் என் எண்ணத்தில் வரும் கற்பனை சம்பவங்களை அவ்வப்போது இந்த வலைப்பக்கங்களில் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்

தமிழில் நான் சராசரிக்கும் மிக மிகக் கீழ். எனவே எழுத்துப் பிழை/பொருட்பிழை இருப்பின் மன்னிக்க (சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்கிறேன்)

இதுவரை...


கதைச்சுருக்கத்திற்கு, மேலே சொடுக்கவும் (முந்தைய பகுதிகளை விரிவாக படிக்க விரும்புபவர்கள் தேதி வாரியாக கீழிருந்து மேலாகப் படிக்கவும்.)

கனிகாஸ்

அனைவரின் வாழ்விலும் கல்லூரி வாழ்க்கை என்பது இனிய நினைவுகளின் காலம். பொதுவாக கல்லூரியில் ஒரே வகுப்பில் பயிலுவோர் ஒத்த வயதில் இருப்பர். ஆனால் திரைப்படக் கல்லூரியியின் விஷயம் வேறாக இருந்தது (இளநிலை பட்டம் முடித்து விட்டு வருவோரும் பள்ளிப் படிப்பு முடித்து வருவோரும் ஒரே துறையில் பயில்வதால் 3-4 வயது வேறுபாடென்பது சாதாரணமாக இருந்தது.)

சென்னை திரைப்படக்கல்லூரி மாணவர்களிடையே 'கனிகாஸ்' மிகப் பிரபலம்.

கதிர்வேல் - 6 அடி உயரம் ஒல்லியான உருவம், அரும்பு மீசை கொதுமை நிறம். கொங்குச்சீமையில் பிரபலமான 3 எழுத்து கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை வேதியியல் முடித்துவிட்டு மூன்று வருடங்களுக்கு பின் கேமிரா தொழில்நுட்பம் பயில வந்தவன். தந்தை கோவை அருகே ஒரு கிராமத்தில் ஜமீந்தார். சொத்துக்க்ள் சிதறிவிடாமல் இருக்க, சொந்தத்தில் மணம் முடிக்கும் வழக்கம் இவர்கள் பரம்பரையில் இருந்தது. தாய் மெத்தப் படித்தவர், நிலபுலன்களை பராமரிப்பதில் கனவருக்கு துனையாக இருப்பவர். சென்னை சாலிகிராமத்தில் அத்தை வீட்டில் தங்கியிருக்கிறான்.

நித்யா - திருப்பதியில் மின்பொறியியல் படித்துவிட்டு இயக்குனராகும் ஆசையில் திரைப்பட இயக்கம் படிக்க வந்தவள். தாய்மொழி தெலுங்கென்றாலும் சிறப்பாக தமிழ் பேசுவாள். தந்தை தாய் இருவரும் அரசு ஊழியர்கள் . தாய் சிறந்த அறிவாளி. தந்தை, தாய் சொல்லை தட்டாதவர். ஒரே பெண் என்பதால் மிகச் செல்லமாக வளர்க்கப்பட்டவள் நித்யா. சென்னை வடபழனியில் ஒரு ஹாஸ்டலில் தங்கியிருக்கிறாள்.

காமெஸ்வரன் (ஈஸ்வர்) - இளங்கலை வரலாறு பயின்றவன். நடிப்பில் நாட்டம் காரணமாக திரைப்படக்கல்லூரி படிப்பை தேர்ந்தெடுத்தவன். தந்தை மருத்துவர், காதலித்து மணம் முடித்தவர். கேரளாவிலிருந்து 15 வருடங்களுக்கு முன்பு பணி காரணமாக சென்னைக்கு மாற்றலாகி வந்தவர், தி.நகரில் சொந்த வீடு. ஈஸ்வர் தாய் தந்தையோடிருக்கும் பொது மட்டும் மலையாளத்தில் பேசுவான்.

ஸ்பந்தனா - பள்ளிப் படிப்பு முடித்து திரைப்படக்கல்லூரியில் நடிப்பு பயில வந்தவள். புதுமை விரும்பி. பெயருக்கு ஏற்றார்போல சொக்க வைக்கும் அழகில் செதுக்கிய சிற்பம் பொலிருப்பாள். தந்தையை இழந்தவள். அண்ணன் சென்னையில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். தாய் பள்ளிப் படிப்பு வரை முடித்தவர். சைதாப்பேட்டையில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். பூர்வீகம் கர்நாடகாவிலுள்ள தும்கூர்.

இந்த நால்வரையும் சேர்ந்து கல்லூரி வட்டத்தில் 'கநிகாஸ்' என்பர்.