திரைப்படக்கல்லூரியில் சேர நேர்முகம் முடித்துவிட்டு அமர்ந்திருந்தான் கதிர். தோளில் யாரோ கை வைப்பது பொல் உணர்ந்தவன் திரும்பிப் பார்த்தால், சராசரி உயரத்தில், அரும்பு மீசையுடன் ஒரு உருவம் சினேகமான புன்னகைத்தது.
"ஹாய், நான் காமெஸ்வரன், ஈஸ்வர்னு கூப்பிடுவா. ஆக்டிங்ல சேர்ந்திருக்கேன்"
"ஹல்லோ, நான் கதிர்வேல், - கதிர். சினிமெடோ கிராப்பியில சேர்ந்திருக்கேன்"
"எனக்கு வரும் வியாழக்கிழமை முதல் வகுப்பு ஆரம்பம். உங்களுக்கு ?"
"எனக்கும் தான்"
"சரி. நேரம் ஆச்சி, தி.நகர் போகனும், மறுபடியும் பார்க்கலாம்"
"நானும் தி.நகர் வழியாகத்தான் சாலிகிராமம் போகனும், வாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே போலாம்"
மத்திய கைலாஷ் வரை நடந்தார்கள்.
பஸ்ஸில் ஏறி அமர்ந்தார்கள். பஸ் கிளம்பிய சமயத்தில் ஒரு தேவதை ஓடி வந்து பஸ்ஸில் ஏறி அமர்ந்து இருவரையும் நோக்கி புன்னகைத்தது.
"வணக்கம், என் பெயர் ஸ்பந்தனா, ஆக்டிங்ல சேர்ந்திருக்கேன். உங்க ரெண்டு பேரையும் தரமனியிலிருந்தே தொடர்ந்து வர்றேன்
"ஈஸ்வர், உங்களுக்கு கிளாஸ்மேட் கிடைச்சாச்சு" - கதிர்
"ஆமாமா, அழகான கிளாஸ்மேட்" - ஈஸ்வர்
கலகலவென முத்துப்பற்க்கள் பளிச்சிட சிரித்தாள் ஸ்பந்தனா.
ஸ்பந்தனா சைதைக்கு டிக்கெட் எடுத்ததை மனதில் பதித்தான் ஈஸ்வர்.
கதிர், பஸ்ஸில் யாரோ தன்னை பார்த்துகொண்டிருப்பதாக உணர்ந்தான்.
வியாழக்கிழமை-
வகுப்புகள் ஆரம்ப நாளின் உற்சாகத்தில் நகர்ந்தது. கதிர், ஸ்பந்தனா, ஈஸ்வர் மூவரும் மாலையில் வகுப்புகள் முடிந்ததும் சிறிது நேரம் பேசிவிட்டு ஒரே பஸ்ஸில் செல்வதை வழக்கமாக்கினர்.
ஸ்பந்தனா சைதாப்பேட்டையில் இறங்க, தி.நகர் வரை ஈஸ்வருடன் சென்று சாலிக்கிராமத்திற்கு மற்றோர் பஸ்ஸில் பயனித்தான் கதிர்.
இன்றும் பஸ்ஸில் யாரோ தன்னை பார்த்துகொண்டிருப்பதாக உணர்ந்தான் கதிர்
ஒரு நாள், மாலை அரட்டையில் ஸ்பந்தனாவோடு குஷ்பு பொல கொழுகொழுவென்று ஒரு பெண் வந்தாள்.
"இது நித்யா - வடபழனி , டைரக்சன் படிக்கிறாங்க" - ஸ்பந்தனா
"கதிர் சாலிக்கிராமம் தாங்க, உங்களுக்கு பஸ்ஸில இனி ஒரு பேச்சு துனை இருக்கு" - ஈஸ்வர்
"ஹாய் ஆல், என்ன இன்னும் நீங்க, வாங்கன்னு, சென்னை கல்ச்சருக்கு மாறுங்கப்பா"
"ஓ.கே டி நித்யா" - ஈஸ்வர்
"இதாண்டா உங்ககிட்ட, கொஞ்சம் விட்டா ஒவரா போவீங்க" - நித்யா
இன்று பஸ்ஸில் நித்யாவோடு செல்லும் போது வழக்கமாக உணர்வது போல் யாரும் தன்னை பார்ப்பதாக தோன்றவில்லை கதிருக்கு.
நீங்க சொல்லுங்க