This page contains 'Unicode' Tamil contents. Make sure to set your browser encoding to 'Unicode'. Click here to know how to enable Unicode in your browser.

கனிகாஸ் - நிஜமல்ல கதை


இனிவரும் நாட்களில் என் எண்ணத்தில் வரும் கற்பனை சம்பவங்களை அவ்வப்போது இந்த வலைப்பக்கங்களில் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்

தமிழில் நான் சராசரிக்கும் மிக மிகக் கீழ். எனவே எழுத்துப் பிழை/பொருட்பிழை இருப்பின் மன்னிக்க (சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்கிறேன்)

இதுவரை...


கதைச்சுருக்கத்திற்கு, மேலே சொடுக்கவும் (முந்தைய பகுதிகளை விரிவாக படிக்க விரும்புபவர்கள் தேதி வாரியாக கீழிருந்து மேலாகப் படிக்கவும்.)

வசந்தம்

மாலை சந்திப்பில் ஒரு நாள்.

"என்ன இன்னும் நித்யாவைக் காணோம் ?" - ஸ்பந்தனா

"காந்தி மண்டபம் போனால் இருப்பாள்" - ஈஸ்வர்

"என்னடா சொல்ற" - கதிர்

"ஆமா, எத்தனை நாள் காலேஜ் மரத்தடியில அரட்டை அடிப்பது, ஒரு மாறுதலுக்காக நாளை முதல் காந்தி மண்டபத்தில் சந்திக்கலாம்னு அவள் கிட்ட சொன்னேன். லூசு இன்னிக்கே பொயிருச்சி பொல இருக்கு" - ஈஸ்வர்

"சே! பாவம்டா. நீ செஞ்சது தப்பு, அவளை எதுக்கு லூசுன்னு திட்ற" - கதிர்

"பாருடா! மாப்ளைக்கு கோவத்த, டேய் உண்மையச் சொல்லு உனக்கு அவள் மேல ஒரு சாப்ட் கார்னர் தானே" - ஈஸ்வர்

"சேச்சே! அப்படியெல்லாம் இல்லடா, எனக்கு இந்த காதல்லல்லாம் நம்பிக்கை இல்லை ஆண்-பெண் இடையே வெறும் நட்பு மட்டும் கூட சாத்தியம் நம்பறவன் நான்" - கதிர்

"உனக்கு எப்படியோ தெரியாது, ஆனா நித்யாக்கு உன் மேல ஒரு நட்பு தாண்டிய ஈர்ப்பு உண்டு. அன்னிக்கு மர்பிங் ஷ்பெசல் க்லாஸ்ல 'ஜீன்ஸ்' படத்தை எடிட் பண்ணும்போது ஐஸ்வர்யா ராய் அழகை நீ வர்னிச்சப்ப அவள் முகத்தை பார்க்கனுமே. பொதுவாய் ஒரு பெண்ணுக்கு பிடிச்சவன் இன்னொரு பெண்ணின் அழகை பத்தி அவளிடம் சொன்னால் விரும்பமாட்டாள்" - ஈஸ்வர்

"அது மட்டுமில்ல. உன்னை பத்தி என்னிடம் அடிக்கடி பேசுறா. உனக்கு வைரஸ் பீவர்னு போன வாரம் 4 நாள் வராதப்ப அம்மனி ரொம்ப அப்செட்" - ஸ்பந்தனா

"நான் சொல்றதை சொல்லிட்டேன், உன் இஷ்டம், சரியாக செயல்பட வேண்டிய போது விட்டுட்டு பின்னால வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை" - ஈஸ்வர்

"சரி எனக்கு ஒரு சின்ன வேலை இரூக்கு, நான் கிளம்புறேன்" - கதிர்

"ஓ.கே நாளைக்கு பார்க்கலாம்" - ஸ்பந்தனா,ஈஸ்வர்

"கதிர்" குரல் கேட்டு திடுக்கிட்டு பஸ்ஸில் இருந்து வெளியில் பார்த்தான் கதிர். காந்தி மண்டப வாசலில் இருந்து அழைத்தது நித்யாவேதான்.

பஸ்ஸில் ஏறுமாறு சைகை செய்தான். அவனருகில் ஏறி அமர்ந்த நித்யா "ஏன் இவ்வளவு லேட்? அவங்க ரெண்டு பேரும் எங்க?" என்றாள்

"இன்னைக்கி எல்லாருக்கும் வேலை இருந்ததால் கிளம்பிட்டாங்க. உன்னிடம் சொல்லிட்டு கிளம்பலாம்னு நான் மட்டும் வந்தேன்" சமாளித்தான் கதிர்

பஸ் சைதாப்பேட்டையை தாண்டி இருந்தது.

"உன் கிட்ட கொஞ்சம் பேசனும்" - கதிர்

"உம் ?" - நித்யா

"நாம ரெண்டு பேரும் லவ் பண்றோம்னு இன்ஸ்டியூட்ல பேசிக்கிறாங்களாம். ஈஸ்வர் சொன்னான். அப்படியா?"