மௌனமாய் அவனை பார்த்தாள்.
"சேச்சே! இருக்காது. ஏன்னா என்னப்பத்தி உனக்கு ஒன்னும் தெரியாது" - கதிர்
மீண்டும் மௌனம். - நித்யா
"சரி லெட்ஸ் அனலைஸ். நான் பழகும் விதம் உனக்கு பிடிச்சிருக்கும் அல்லது எனது இயல்பு பிடிச்சிருக்கும். இல்லன்னா என் உருவம் உன் குடும்பத்தில் உனக்கு பிடிச்ச ஒருத்தர் போல இருக்கலாம். வேற ஏதாவது கூட இருக்கலாம்." - கதிர்
"என்னன்னு சொல்லத் தெரியலை. ஆனா இது நட்பு மட்டும் இல்லைன்னு தெரியும்" - நித்யா
"யோசிச்சு பாரு நித்தி. நம்ம ரெண்டு பெரும் வாழ்வில் பெரிய நோக்கங்களை நோக்கி பொயிக்கிட்டிருக்கோம். உயரத்தில் இருக்கும்போது இது போல பல நேரங்களில் நாம் தனியாக முடிவெடுக்க வேண்டி வரும்" - கதிர்
"யோசிக்க முடியலை" - நித்யா
"ஓ.கே நான் சொல்றேன். ப்ரெண்ட்ஷிப் தாண்டி நாம ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் கேர் பண்ணிக்றோம். பட் ஸ்டில், இதை காதல், கல்யாணம், செக்ஸ், குழந்தை, சராசரி வாழ்க்கை - இப்படி வளர்க்க வேண்டாம். ஏன்னா இதுல ஒரு தோல்வி வந்தா அதோட பாதிப்பு நம்ப கரியர்ல அடி வாங்கிடும்" - கதிர்
"அதே சமயம் நாம இதே பொல ப்ரெண்ட்ஷிப் மட்டும் கன்ட்ரக்டிவா வளர்த்தா ரெண்டு பேருக்குமே நல்லது" - கதிர்
"இப்ப சொல்லு. நாம ரெண்டு பேரும் லவ் பண்ணலை இல்லையா ?" - கதிர்
"உம்" அரை மனதாய் தலையசைத்தாள் நித்யா
பஸ் வடபழனியில் நின்றது.
"ஓ.கே நித்தி. நாளை பார்க்கலாம்" - கதிர்
மறுநாள்-
மாலை அரட்டைக்கு நித்யா, ஸ்பந்தனா இருவருமே வரவில்லை.
"என்னடா கதிர், இன்னைக்கு இவங்க ரெண்டு பெருமே காணுமே" - ஈஸ்வர்
"தெரியலடா" - கதிர்
"உன் கிட்ட முக்கியமான விஷயம் சொல்லனும்" - ஈஸ்வர்
"என்ன?" - கதிர்
"நான் ஸ்பந்தனாவை லவ் பண்றேன். அவள்ட்ட நேத்து சொல்லிட்டேன்" - ஈஸ்வர்
"அப்படியா. அவ என்ன சொன்னா?" - கதிர்
"ஒரு வாரம் யோசிச்சி பதில் சொல்றேன்னா" - ஈஸ்வர்
"கொஞ்ச நாள் பழக்கத்தில எப்டிரா உங்களுக்கெல்லாம் லவ் வருது" நக்கலான புன்னகையோடு
சொன்னான் கதிர்
"சரி நான் கிளம்பறேன். இன்னைக்கு எங்க மாமா ஊர்ல இருந்து வந்திருக்காங்க" என்றபடி கிளம்பினான் ஈஸ்வர்
சிறிது நேரம் கதிர் ஏதோ யோசனையிலிருந்தபோது ஸ்பந்தனா வந்தாள்.
"என்ன கதிர் எங்க போனாங்க ஈஸ்வரும் நித்தியும் ?" - ஸ்பந்தனா
"நித்தி இன்னிக்கு காணோம், ஈஸ்வர் இப்பதான் கிளம்பினான்" - கதிர்
"அப்றம், வேற என்ன விஷயம் ?" - ஸ்பந்தனா
"வேற என்ன, வீட்ல எனக்கு பொண்ணு பார்க்கறங்க. உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிறயா?" - கதிர்
"விளையாடாதே கதிர்" - ஸ்பந்தனா
"இல்லை நான் ரொம்ப சீரியஸா யோசிச்சிதான் சொல்றேன். என்னை கல்யாணம் பண்ணிக்கிறயா?" மறுபடி கேட்டான் கதிர்
நீங்க சொல்லுங்க