This page contains 'Unicode' Tamil contents. Make sure to set your browser encoding to 'Unicode'. Click here to know how to enable Unicode in your browser.

கனிகாஸ் - நிஜமல்ல கதை


இனிவரும் நாட்களில் என் எண்ணத்தில் வரும் கற்பனை சம்பவங்களை அவ்வப்போது இந்த வலைப்பக்கங்களில் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்

தமிழில் நான் சராசரிக்கும் மிக மிகக் கீழ். எனவே எழுத்துப் பிழை/பொருட்பிழை இருப்பின் மன்னிக்க (சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்கிறேன்)

இதுவரை...


கதைச்சுருக்கத்திற்கு, மேலே சொடுக்கவும் (முந்தைய பகுதிகளை விரிவாக படிக்க விரும்புபவர்கள் தேதி வாரியாக கீழிருந்து மேலாகப் படிக்கவும்.)

என்னமோ நடக்குது

"என்ன சொல்ற" - ஸ்பந்தனா

"ஆமா, யோசிச்சு பாரு. படிச்சி முடிச்சாச்சி, இப்ப நடிப்பு கத்துக்கிட்டப்றம் சிறந்த நடிகையா ஆகனும்னா அது தமிழ் சினிமால முடியாது, ஏன்னா இங்க ஹீரோவுக்கு இருக்கிற அளவு ஹீரோயினுக்கு முக்கியத்துவமில்ல" - கதிர்

"சரி ஓ.கே, காசு பணம், புகழ் எல்லாம் சேர்த்தாச்சின்னு வச்சிக்க, அதுக்கப்றம் ? என்னன்னு எப்பவாவது யோசிச்சி பாத்துருக்கியா. சூட்டிங் முடிஞ்சி வீடு வந்து சேரும்போது நம்ம புரிஞ்சிக்கிற, நமக்காக கேர் எடுத்துக்கிற ஒருத்தர் இருக்கனும்" - கதிர்

"" - ஸ்பந்தனா

"இப்ப உடனே கூட கல்யாணம் பண்றதப்பத்தி யோசிக்க வேணாம், நாம ரெண்டு பேரும் கரியர்ல சாதிக்க வேண்டியதெல்லாம் சாதிச்சப்றம் கல்யாணம் பண்ணிக்கலாம், நீ சரின்னு சொன்னா நான் வெயிட் பண்றேன்" - கதிர்

"" - ஸ்பந்தனா

"அது மட்டுமில்ல, இன் கேஸ் நம்ம கரியர் நாம நெனச்சபடி அமையலன்னாகூட, எனனோட பூர்வீக சொத்துக்களை வைத்து கோயமுத்தூர்ல நல்ல வாழ்க்கைய அமைச்சிக்கலாம். என்ன சொல்ற" - கதிர்

"திடீர்னு கேட்டா என்ன சொல்றதுன்னு தெரியல கதிர்" - ஸ்பந்தனா

"டேக் யுவர் ஓன் டைம் ஸ்பந்தனா, ஒரு வாரம் கழிச்சி உன் முடிவை சொல்லு" - கதிர்

நீண்ட மௌனத்திற்குப் பின் இருவரும் கலைந்து செல்கின்றனர்.

காந்தி மண்டபத்தில் மறுநாள் மாலை 7 மணி.

வழக்கம் போல ஏன் யாரும் வரவில்லை கதிர் ஏதோ யோசனையில் இருந்தபோது நித்யா வந்து சேர்ந்தாள்

"வாங்க அம்மனி, இப்ப தான் மணி 5 ஆகுதுங்களா ?" - கதிர்

"சாரி கதிர், அடையார்ல பர்சேஸ் முடிச்சி வர்றதுக்கு கொஞ்சம் லேட் ஆயிடிச்சி. அது சரி, அவங்க ரெண்டு பேரும் எங்க"

"இன்னும் வரலை." - கதிர்

முப்பது நிமிஷ நேரம் மௌனத்தில் கரைந்தது. தூரத்தில் பிரச்சனை அவர்களுக்காக ஒரு குடிகார போலீஸ் ரூபத்தில் வந்தது.

"ஏய், இன்னாடா, எங்கிந்து தள்ளிக்கினு வந்திருக்க"

"சார், கொஞ்சம் மரியாதையா பேசுங்க. வீ ஆர் பில்ம் இன்ஸ்டியூட் ஸ்டூடெண்ட்ஸ்" - கதிர்

"அப்டியா கன்ணுகளா, ஐ.டி கார்டு எங்க ?"

இவர்கள் இருவரும் ஐ.டி கார்டு காண்பிக்க, அதை பிடுங்கி வைத்துக்கொண்டு "நூறு ரூபா குடுத்துட்டு வாங்கிக்க" என்றான் அந்த குடிகாரன்.

ஒரு வழியாக கதிர் தன் தந்தையின் நன்பரான உயர் போலீஸ் அதிகாரிக்கு போன் செய்து அந்த குடிகாரனிடமிருந்து ஐ.டி கார்டை வாங்குவதற்குள் போதுமென்றானது.

மறுநாள் முதல் அடையாரில் இருக்கும் ஒரு நல்ல ஓட்டலின் ஏ.சி செய்யப்பட்ட உணவருந்தும் அறையில் வாரம் ஒரு முறை மட்டும் சந்திக்கலாம் என்று சொன்ன நித்யா. இதை ஈஸ்வருக்கும் ஸ்பந்தனாவுக்கும் தானே சொல்லிவிடுவதாகச் சொன்னாள்.

அடுத்த வாரமும் அதன் பின்னும் ஏனோ ஈஸ்வரும் ஸ்பந்தனாவும் இவர்களோடு அரட்டை கச்சேரிக்கு வரவில்லை. கதிர் இதுபற்றி நித்யாவைக் கேட்டப்போது இருவரிடமும் ஓட்டலில் சந்திக்கலாம் என்று சொன்னதாகவும் அவர்கள் அதற்கு பதில் சொல்லவில்லை என்றும் சொன்னாள். கல்லூரியிலும் நித்யாவையோ கதிரையோ எப்பொழுதாவது பார்க்க நேர்ந்தால் பார்க்காததுபோல முகத்தை திருப்பிக்கொண்டு சென்றனர் ஈஸ்வரும் ஸ்பந்தனாவும்.

ஒரு நாள் அடையாரில் ஓட்டலில் கதிரும் நித்யாவும் ஆர்டர் செய்துவிட்டு பேசிக்கொண்டிருந்தபோது பக்கத்து சீட்டிலிருந்த ஒல்லியான உயரமான ஒருவன் நேராக இவர்கள் சீட்டுக்கு வந்து தான் அணிந்திருந்த மெல்லிய கண்ணாடி வழியாக கதிரை முறைத்துப் பார்த்தான்.

"டேய்! நீ விவிதபாரதி தானே, என்னடா இந்தப்பக்கம்" என்றான் கதிர் ஆச்சர்யத்தில் கண்கள் விரிய. கதிரின் கல்லூரிக்கால நன்பன் விஸ்வபாரதி, கதிர் அவனை விஸ்வா என்று அழைப்பான். சிலசமயம் வம்புக்கிழுக்க நினைத்தால் விவிதபாரதி என்பான்