This page contains 'Unicode' Tamil contents. Make sure to set your browser encoding to 'Unicode'. Click here to know how to enable Unicode in your browser.

கனிகாஸ் - நிஜமல்ல கதை


இனிவரும் நாட்களில் என் எண்ணத்தில் வரும் கற்பனை சம்பவங்களை அவ்வப்போது இந்த வலைப்பக்கங்களில் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்

தமிழில் நான் சராசரிக்கும் மிக மிகக் கீழ். எனவே எழுத்துப் பிழை/பொருட்பிழை இருப்பின் மன்னிக்க (சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்கிறேன்)

இதுவரை...


கதைச்சுருக்கத்திற்கு, மேலே சொடுக்கவும் (முந்தைய பகுதிகளை விரிவாக படிக்க விரும்புபவர்கள் தேதி வாரியாக கீழிருந்து மேலாகப் படிக்கவும்.)

அந்த நாள் ஞாபகம்

"இது யாருடா? திரும்பவுப் லவ்வா ?" என்றான் விஸ்வபரதி

"சேச்சே! ப்ரெண்டுடா, பேரு நித்யா. இன்ஸ்டியூட்ல டைரக்ஷன் படிக்கிறா. ஓ! உனக்கு தெரியாதில்ல, நான் இப்ப சினிமெட்டோ கிராப்பி பண்றன்டா" - கதிர்

"அதானே பார்த்தேன், எங்கடா சங்கீதா விஷயத்தில பட்ட காயத்தை அதுக்குள்ள மறந்துட்டியோன்னு நெனச்சேன்" - விஸ்வபரதி

"அது யாரு சங்கீதா?" - நித்யா

"அது ஒரு பெரிய கதை. அப்ப நாங்க ஆர்ட்ஸ் காலேஜ்ல படிச்சிக்கிட்டிருந்தோம்" - கதிர்வேல்

(ப்ளாஷ்பேக் - அவரவர் வசதிப்படி கொசுவத்தி சுருளை உருட்டலாம், ட்ரொய்ய்ய்ய்ய்ங் சவுண்ட் கொடுத்துக்கலாம் அல்லது வேறேதேனும் கிராபிக்ஸ் எபெக்ட் கொடுக்கலாம்)

கலைக்கல்லூரியில் ஒரு நாள் -

"வாடா ரத்னகுமார். எப்படி போச்சி செமஸ்டர் லீவெல்லாம் ?" - கதிர்

"செம மஜா! மூனு வாட்டி வெத்தலை போட்டேன் - காஞ்சிப்போன வெத்தலை தான் ஆனா ஓ.கே"
(ரத்னகுமார் கஞ்சாவை வெத்தலை என சொல்வான்)

"திருந்தவே மாட்டியாடா?" - கதிர்

"என்னத்துக்கு அவன் திருந்தனும்? அவன் கெட்டாத்தானே திருந்தறதுக்கு. இப்ப, நீயே ஒரு பெரிய பிசினஸ்மேன் ஆவுறன்னு வெச்சிக்க, ஒரு தண்ணி பார்ட்டிக்கி இல்லன்னா மஜா பார்ட்டிக்கி பொவுறன்னு வெச்சிக்க அங்க தண்ணி அடிச்சா தள்ளாடாம இருக்கனும்ல, அதுக்கு தான் இப்ப இருந்தே எல்லா கிக்கும் மேனேஜ் பண்றதுக்கு ப்ராக்டிஸ் எடுத்துக்கன்னு சொல்றேன்" - விஸ்வபாரதி

"இப்படி சொல்லிச் சொல்லித்தான் தம்மு, பீரு அப்றம் ஹாட் எல்லாம் அடிச்சம். போதும்டா. எந்த ஹைக்கிளாஸ் பார்ட்டியிலயும் கஞ்சால்லாம் அடிக்க வேண்டி வராது" - கதிர்

"ஓ.கே அவனவனுக்கு எப்ப எதச் செய்யனும் எத நிறுத்தனும்னு தெரியும். இதுல தலையிடாத" - விஸ்வபாரதி

"ஏதோ நல்ல புத்தி சொல்றேன். அப்றம் உன் இஷ்டம்டா ரத்னா" - கதிர்

"டேய் அதெல்லாம் விடு. 2 வருஷமா நீயும் சங்கீதாவும் ஒருத்தர ஒருத்தர் பார்த்துக்றீங்க, கண்ணால பேசிக்றீங்க. உன் லவ்வை எப்பச் சொல்றதா உத்தேசம் ?" - ரத்னகுமார்

"காலேஜ் கல்சுரல் செக்ரேட்டரி எலக்சன் வருதில்ல. அதுல நின்னு ஜெயிச்சப்றம் சொல்லலாம்னு இருக்கேன்" - கதிர்

"டேய் உன்ன எதுத்து நிக்கிற அர்ஜுன்க்கு ஸ்டுடண்ட்ஸ் கிட்ட பவர் ஜாஸ்திடா. எப்படி ஜெயிக்கப் போற" - ரத்னகுமார்

"நமக்கும் ஓரளவுக்கு சப்போர்ட் இருக்குடா. அது போக நடுநிலையா இருக்கிற ஸ்டுடண்ட்ஸ் கிட்ட பேசி எப்படியாவது உள்ளாற விளையாடியாவது உன்னய ஜெயிக்க வக்கிறன்டா கதிரு" - விஸ்வா

"கல்சுரல் செக்ரேட்டரியா ஆவறது மட்டுமில்லடா. வர்ற பாட்டுப் போட்டியில சங்கீதாவோட சேர்ந்து பம்பாய் படத்துல வர்ற "உயிரே..." பாட்டு பாடனும்" - கதிர்

"தம்பி! பொண்னோட சேந்து பாடினா சஸ்பெண்ட் பண்ணிருவாங்கப்பா!" - ரத்னகுமார்

"அதப்பத்தி எல்லாம் கவலைப்படாதேடா. எப்படியாவது உன்னோட இந்த ஆசையையும் நிறைவேத்த வழி பாக்கலாம். ஆனா ஒன்னுடா உன் காதல் உண்மையானதுன்னா கண்டிப்பா கல்யாணத்துல முடியும். இல்லன்னா இப்ப நாம பண்ற அத்தனையும் வேஸ்ட்" - விஸ்வா

"கண்டிப்பா நான் ஜெயிப்பன்டா. எலக்சன்லயும்... காதல்லயும்......"

ஒரு வாரம் ஓடியது. கதிருக்காக எல்லாரிடமும் விஸ்வாவும் நன்பர்களும் பேசி ஓட்டு சேகரித்தார்கள்

எலக்ஷன் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டது

அர்ஜுன் எதிர்பாரா விதமாகத் தோற்றுப் போயிருந்தான். கதிர் தன் நன்பர்களுடன் வெற்றிக்களிப்பில் மூழ்கிக் காணாமலே போனான்.

கல்லூரியின் பாட்டுப்ப்போட்டி அறிவிப்பும் வந்தது. மூன்றே நாட்கள் இருந்தது.