This page contains 'Unicode' Tamil contents. Make sure to set your browser encoding to 'Unicode'. Click here to know how to enable Unicode in your browser.

கனிகாஸ் - நிஜமல்ல கதை


இனிவரும் நாட்களில் என் எண்ணத்தில் வரும் கற்பனை சம்பவங்களை அவ்வப்போது இந்த வலைப்பக்கங்களில் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்

தமிழில் நான் சராசரிக்கும் மிக மிகக் கீழ். எனவே எழுத்துப் பிழை/பொருட்பிழை இருப்பின் மன்னிக்க (சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்கிறேன்)

இதுவரை...


கதைச்சுருக்கத்திற்கு, மேலே சொடுக்கவும் (முந்தைய பகுதிகளை விரிவாக படிக்க விரும்புபவர்கள் தேதி வாரியாக கீழிருந்து மேலாகப் படிக்கவும்.)

இன்னார்க்கு இன்னார் என்று

கல்லூரிப் பூங்காவில் சங்கீதாவைக் கண்ட விஸ்வா அவளிடம், பாட்டுப் போட்டி பற்றி பேச ஆரம்பித்தான்.

"ஹாய் சங்கீ. ஆமா, வர்ற பாட்டுப் போட்டில பாடப் போறியா?" - விஸ்வா

"இல்ல. இந்த வாட்டி போட்டி பலமா இருக்கும் போல இருக்கு. அதனால கலந்துக்கறதா இல்ல" - சங்கீதா

"ஏய், கமான். உனக்கு நல்ல வாய்ஸ் இருக்கு. க்ரூப் சாங்ல நம்ம கதிர் கூட பம்பாய் பட்த்துல வர்ற 'உயிரே' பாட்டு பாட்றான், பீமேல் சிங்கர் தான் இன்னும் செட் ஆவலை. நீ அவனோட சேந்து பாடலாம்ல ?" - விஸ்வா

"நான் சோலோ மட்டும் கலந்துக்கலாம்னு இருந்தேன். புன்னகை மன்னன்ல இருந்து 'வான் மேகம்' பாட்டு பாடலாம்னு"- சங்கீதா

"பரவாயில்ல. அவன் கூட சேந்து 'உயிரே' பாட்டும் பாடலாம். ஜெயிச்சா ப்ரைஸ் மணிய ரெண்டு பேரும் ஷேர் பண்ணிக்கங்க" - விஸ்வா

"ஓ.கே. பட் ஒன் கண்டிஷன். நான் 'கடலோரக் கவிதைகள்' படத்துல வர்ற 'அடி ஆத்தாடி' பாட்டுன்னா கதிர் கூட பாடுறன்" - சங்கீதா

"அதெல்லாம் முடியாது. 'உயிரே' பாட்டுதான்னு முடிவு பண்ணியாச்சி. உன்னால முடியாதுன்னா சொல்லு. நான் வேற யாரயாவது கேட்டுக்றேன்" - விஸ்வா

சங்கீதா "நான் இஷ்டப்பட்ட பாட்டுன்னா பாடுறன். இல்லன்னா முடியாது" என்றாள் பிடிவாதமாக

விஸ்வா ஏமாற்றத்துடன் திரும்பி நடந்து வந்த போது ரத்னகுமாரும் கதிரும் வந்தார்கள்

"என்னடா, கதிர் கூட பாடுறாளாமா ?" - ரத்னகுமார்

"கேட்டன்டா, 'உயிரே' பாட்டு பாடமாட்டாளாம். வேற பாட்டுன்னா பாடுறாளாம்" - விஸ்வா

"என்ன பாட்டுன்னாலும் சரிடா. நான் அவ கூட பாடனும் அவ்ளோதான்" - கதிர்

"போடாங்கு. இப்ப உன் கூட பாடறதுக்கே கண்டிஷன் போட்டா அப்றம் எப்படிடா லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கப்போற" - ரத்னகுமார்

"எல்லாத்லயும் வுட்டு குடுத்து போனா ஒன்னும் ப்ரச்சனை வராதுரா" - கதிர்

"எல்லாம் சரி. இப்ப பாட்டுப் போட்டில சோலோ, க்ரூப் சாங் ரெண்டுலயும் உன் பேர் குடுத்தாச்சி. யாரயாவது க்ரூப் சாங்குக்கு பாட வெச்சே ஆவனும்" - ரத்னகுமார்

"டேய். ஐடியா. செகண்ட் இயர் பைரவியக் கேக்றன். அவ ஒத்துக்கிட்டா ப்ரச்சனை தீந்தது" - விஸ்வா

அரைமணி நேரம் கழித்து வந்தான் விஸ்வா, பைரவியுடன். அங்கேயே பாட்டுப் பயிற்சியை ஆரம்பித்தனர்.

பாடி முடித்ததும்-

"டே கதிர், எல்லாம் நல்லாத்தான் பாடுற. ஆனா பாடும்போது கைய வச்சிகிட்டு சும்மா இருக்காம தலய எதுக்கு சொறியர?" - ரத்னகுமார்

"ரம்ப கஷ்டப்பட்டு பேசி பைரவியக் கூட்டினு வந்துருக்கண்டா. இது வரக்கும் அவ எந்த பாட்டுப்போட்டிலயும் தோத்ததில்ல. அதுமட்டுமில்ல க்ரூப் சாங்ல லேடிஸ் மட்டும் இல்லன்னா ஜெண்ட்ஸ் மட்டும் சேந்து பாடத்தான் அலோடுன்னு உனக்கே தெரியும். உன் கூட சேந்து பாடினா சஸ்பெண்ட் பண்ணிடுவாங்கன்னு தெரிஞ்சும் எனக்காக சரின்னு சொல்லியிருக்கா கவுத்துறாதடா. " - விஸ்வா

"அதெல்லாம் கவலப்படாதிங்கடா. கலக்கிடலாம்" - கதிர்

பாட்டுப்போட்டி நடைபெறும் நேரம் வந்தது. அனைவரும் அரங்கத்தில் கூடி இருந்தனர்

அறிவிப்பாளர் ஒவ்வோருவர் பெயராக அறிவிக்க, சோலோ போட்டி ஆரம்பித்தது.

சங்கீதாவின் பெயர் அறிவிக்கப் பட்டதும் மேடை ஏறி சிப்பிக்குள் முத்து படத்தில் வரும் 'லாலி லாலி' பாட்டு பாடினாள்

கதிர் சோலோவில் 'காலங்களில் அவள் வசந்தம்' பாடினான்

அடுத்ததாக க்ரூப் சாங் போட்டி ஆரம்பித்தது.

சங்கீதாவின் குழு மைக்கேல் ஜாக்சனின் 'ஹீல் த வோல்ட்' பாடினார்கள். விஸ்வாவின் மனதுக்குள் சங்கீதா ஏன் பொய் சொன்னாள் என்ற எண்ணம் ஓடியது

கதிரின் முறையும் வந்தது.

"அடுத்து வருபவர் பைரவி கதிர்" - அறிவிப்பாளர் அனைவரும் ஆச்சர்யமாகப்பார்த்தனர்

தவற்றை உணர்ந்த அறிவிப்பாளர் மீண்டும் அறிவித்தார் "அடுத்து வருபவர் பைரவி மற்றும் கதிர்".

ஆணும் பெண்ணும் சேந்து பாடினா சஸ்பெண்ட் பண்ணிடுவாங்கன்னு தெரிஞ்சும் பாட வந்து இருக்காங்க என்று கூட்டத்தில் சில பேர் கிசுகிசுத்தனர்.

இருவரும் மேடை ஏறி பாடி முடித்தனர். தொடர்ந்து இன்னும் சிலரும் பாடி முடித்தனர்.

முடிவுகள் அறிவிக்கப்பட்டது. சோலோவில் கதிர் வெற்றி பெற்றான். க்ரூப் சாங்கில் சங்கீதாவின் குழு வெற்றி பெற்றது.

பைரவி தோல்வியை ஏற்று சிறு புன்னகை தவழ அரங்கை விட்டு வெளியேறினாள்.

அவளை சமாதானப்படுத்த விரைந்த விஸ்வாவின் மனதில் சங்கீதாவின் பொய்யும் அறிவிப்பாளர் கதிரையும் பைரவியையும் அறிவித்த விதமும் மாறி மாறி வந்தது.