This page contains 'Unicode' Tamil contents. Make sure to set your browser encoding to 'Unicode'. Click here to know how to enable Unicode in your browser.

கனிகாஸ் - நிஜமல்ல கதை


இனிவரும் நாட்களில் என் எண்ணத்தில் வரும் கற்பனை சம்பவங்களை அவ்வப்போது இந்த வலைப்பக்கங்களில் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்

தமிழில் நான் சராசரிக்கும் மிக மிகக் கீழ். எனவே எழுத்துப் பிழை/பொருட்பிழை இருப்பின் மன்னிக்க (சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்கிறேன்)

இதுவரை...


கதைச்சுருக்கத்திற்கு, மேலே சொடுக்கவும் (முந்தைய பகுதிகளை விரிவாக படிக்க விரும்புபவர்கள் தேதி வாரியாக கீழிருந்து மேலாகப் படிக்கவும்.)

ரெட்டைச்சூரியனும் ஒற்றைத்தாமரையும்

கல்லூரிப் பூங்காவில் தனியாக அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்த பைரவியின் அருகில் வந்து அமர்ந்தான் விஸ்வா.

"சாரி பைரவி. நான் மட்டும் உன்னை கதிர் கூட பாடச்சொல்லி கூப்பிடலைன்னா இந்த முறை நீ வழக்கம் பொல ஜெயிச்சிருப்பியில்ல?" - விஸ்வா

"ப்ச். அதனால என்ன பரவாயில்ல. அடுத்தவாட்டி பாத்துக்கலாம்" - பைரவி

"ரொம்ப சாரி" - விஸ்வா

"அத விடு. வேற எதாவது பேசலாம்" - பைரவி

கதிர் பத்தி நீ என்ன நெனக்கிற" - விஸ்வா

"அவனுக்கு நல்ல வாய்ஸ். எஸ்.பி.பி வாய்ஸும் ஜேசுதாஸ் வாய்ஸும் கலந்து வெச்ச மாத்ரி. ஒழுங்கா முறைப்படி கர்னாடிக் மியூசிக் கத்துகிட்டான்னா பெரிய ஆளா வரலாம்" - பைரவி

"உனக்கு தெரிஞ்ச கர்னாடிக் ம்யூசிக் டீச்சர் யாராவது இருந்தாக்க சொல்லேன். அவனைப்போய் கத்துக்கச் சொல்றன்" - விஸ்வா

"சாய்பாபா காலனில விஜயலக்ஷ்மின்னு ஒரு பாட்டு டீச்சர் இருக்காங்க அவங்களுக்கு கர்னாடிக், இந்துஸ்தானி எல்லாம் அத்துபடி. நான் கூட அவங்ககிட்டத்தான் ரெண்டு வருஷமா கத்துக்கறன். நீ வேனும்னா அவனை அங்க வந்து கத்துக்க சொல்லேன்" - பைரவி

"ஓ. அப்பசரி நான் நாளைக்கே அவங்களப்போய் பாக்கச்சொல்லி அவன் கிட்ட சொல்லிடறன்" - விஸ்வா

"குட். அப்றம், வேற எதாவது விஷயம் இருக்கா? நேரமாச்சி நான் வீட்டுக்கு போலாம்னு இருக்கேன்" - பைரவி

"சரி அப்ப கிளம்பு அப்றமா பாக்கலாம். பை" - விஸ்வா

"பை. பை" - பைரவி

மறுநாள் மாலை கல்லூரி முடிந்த பிறகு கல்லூரி காம்பவுன்ட் சுவரில் கதிர், விஸ்வா, ரத்னகுமார் மற்றும் நன்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருகின்றனர்.

மாலை நேர ஜமாவில் புதிதாகச் சேர்ந்தவர்கள் வேலுச்சாமியும் அவன் நன்பர்கள் ராஜேந்தர் மற்றும் வாசு. இவர்கள் மூவரும் முந்தயநாள் பாட்டுப் போட்டியில் பழக்கமானவர்கள். மூவரும் ஒன்றாக தங்கி இருக்கிறார்கள்

"வருக வருக 'கானாக்குயில் குப்பத்துராஜா' அவர்களே. தங்கள் வரவு நல்வரவாகுக" - விஸ்வா

வேலுச்சாமி என்றால் கல்லூரியில் யாருக்கும் தெரியாது. கானாப் பாடல்களை நன்றாகப் பாடுவான் என்பதால் அவனுக்கு "கானாக்குயில் குப்பத்துராஜா" என்ற பட்டப்பேர் உண்டு. "கானா" என்று செல்லமாக அழைப்பார்கள்

"என்ன கானா, நேத்து பாட்டுப் போட்டியில ஒரே ரொமான்ஸ் மூட்ல இருந்த போல? புஷ்பவனம் குப்புசாமியோட 'ராசாத்தி ஒன்ன எண்ணி' பாட்டு ஜோரா இருந்திச்சி" - ரத்னகுமர்

"என்ன பண்ணி என்ன பிரியோஜனம், கதிர் ஒரு பழைய பாட்ட பாடி எல்லாரையும் கவுத்துட்டாரு. ஏதோ எனக்கு ப்ரைஸ் கிடைக்கலைன்னாலும் நம்ப ஆளுக்கு க்ரூப் சாங்க்ல பஸ்ட் ப்ரைஸ் கெடச்சிச்சே அதே ரொம்ப சந்தோஷமா இருக்கு" - கானா

"க்ரூப் சாங்க்ல யாரு பூரணியா,சரன்யாவா, இல்ல சங்கீதாவா?" - ரத்னகுமார்

"வேற யாரு சங்கீதாதான்" - ராஜேந்தர்

"என்ன மச்சி சொல்ற நீ சங்கீதாவ லவ் பன்றயா?" - விஸ்வா

"ஐயோடா. அத ஏன் கேக்ற. தெனமும் இவன் தூக்கத்துல ஒளர்ர ஒளரல் எல்லாம் நாங்க தான கேக்றம். எப்பப்பாரு சங்கீதா சங்கீதா சங்கீதாதான்" - வாசு

"நீ சொல்லு கானா, நிஜம்மா நீ சங்கீதாவ லவ் பன்றயா?" - விஸ்வா

"ஆமா விஸ்வா. நான் சங்கீதாவ ரொம்ப சின்சியரா லவ் பன்றன்" - கானா

கதிருக்கு மனதுக்குள் ஆயிரம் வாட்ஸ் மின்னல் ஒன்று பாய்ந்த மாதிரி அதிர்ச்சியாக இருந்தது

"அத அவ கிட்ட சொல்லிட்டியா கானா ?" - விஸ்வா

"இன்னும் இல்ல விஸ்வா, நானு ரெண்டரை வருஷமா நல்ல சமயம் பாத்து சொல்லலான்னு வெயிட் பன்றன், இன்னிக்கு வரைக்கும் சொல்ல முடியல" - கானா

"அது சரி, எப்ப சொல்றதா உத்தேசம் ?" - விஸ்வா

"நீங்கல்லாம் சேர்ந்துதான் எனக்கு இது விஷயமா ஹெல்ப் பண்ணனும்" - கானா

"சரி. நாம கொஞ்சம் வெளிப்படையா பேசறது நல்லது" - விஸ்வா

"வேணாம் விஸ்வா" என்று தடுக்க முயன்றான் கதிர்

"தடுக்காத கதிர், நாமல்லாம் இப்ப ஒத்துமயா இருக்கோம் நீங்க ரெண்டு பேரும் ஒரு போண்ணுக்கோசரம் சண்டை போடற நெலம வர வெணாம்" - விஸ்வா

"என்ன சொல்ற விஸ்வா? கதிரும் சங்கீதாவ லவ் பன்றானா?" - கானா

"ஆமா கானா. அவனும் ரெண்டரை வருஷமா அவளை லவ் பன்றான், உன்னப்போல அவ கிட்ட அவனும் இன்னும் சொல்லலை" -விஸ்வா

அதன் பின் சற்று நேரம் அங்கே மயான அமைதி நிலவியது

"எல்லாரும் அமைதியா இருந்தா எப்படி. இதுக்கு நான் ஒரு தீர்வு சொல்லவா? ரெண்டு பேரும் சங்கீதா கிட்ட போய் உங்க லவ்வப் பத்தி சொல்லுங்க. அவ யாருக்கு ஓ.கே சொல்றாளோ அவன் கன்டினிவ் பண்ணுங்க. இந்த சின்ன விஷயத்துக்காக நம்ம நட்புல விரிசல் வரக்கூடாது." - ரத்னகுமார்

"நீ சொல்ற மாதிரி அது அவ்ளவு சுலபமில்லடா. இவ்ளவு அவசரப்பட வேண்டாம்" - கதிர்

"இப்ப சொல்லாட்டி எப்ப சொல்லப்போறீங்க. இன்னம் 3 மாசத்துல நம்ம காலேஜ் லைபே முடிஞ்சிரும். முடிவாச்சொல்றேன் கேட்டுக்கங்க நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் அவ கிட்ட போய் உங்க லவ்வச் சொல்லலைன்னாக்க அப்றம் இந்த ரத்னகுமார் அவள கரைக்ட்டு பண்ணீட்டு பொயிகினே இருப்பான்" - ரத்னகுமார்

அத்தோடு அன்றைய மாலை ஜமா முடிந்தது.